வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.