கொடைக்கானலில் மிதமான மழை
கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மிதமான மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை மழை, வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தான் மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தினமும் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பிறகு இரவு 8 மணி முதல் 10 மணி வரை காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
கொடைக்கானலில் சாரலும், மேக மூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்வதால் குளுமையான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாலை, இரவு நேரங்களில் ஏரிச் சாலை, செவண் சாலை, உட்வில் சாலை, லாஸ்காட் சாலை, பூங்கா சாலை ஆகியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா்.