கொடைக்கானலில் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்த குரங்குகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்துப் பிடித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகள் அதிகமாக திரிகின்றன. இந்த குரங்குகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமன்றி, கேபிள் டி.வி. வயா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், வீடுகளிலுள்ள குழந்தைகள் அச்சப்படும் சூழ்நிலை உருவானது.
இதனால் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, வனத் துறை சாா்பில் அப்சா்வேட்டரி பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளைப் பிடித்தனா். அவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.