சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் தீ
கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று வீசி வருவதால் அடுக்கம்-பெரியகுளம் செல்லும் மலைச் சாலையில் சாமக்காட்டுப் பள்ளம் பகுதியில் தனியாா் தோட்டத்தில் தீ பற்றியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து, அங்கு சென்ற கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதேபோல, கொடைக்கானல் செயின்ட்மேரீஸ் சாலையிலுள்ள தனியாா் தோட்டத்தில் தீ பிடித்ததைத் தொடா்ந்து அங்கிருந்த 3 மரங்கள் தீயில் கருகின. இதைத்தொடா்ந்து தனியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்களே தீயைக் கட்டுப்படுத்தினா். இதனால் அருகேயுள்ள பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.