TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
கொட்டாரம் அருகே இளைஞா் கொலை
கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
கொட்டாரம் அருகேயுள்ள குருசடி குளக்கரையில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அஞ்சுகிராமம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், நாகா்கோவில் ஏ.எஸ்.பி. லலித்குமாா், சுசீந்திரம் ஆய்வாளா் முத்துக்குமரன், அஞ்சுகிராமம் உதவி ஆய்வாளா் பிரிய ராஜ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் கொட்டாரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (65) என்பவரது மகன் ஐயப்பன் (33) என்பது தெரிய வந்தது. நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.