குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!
தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!
தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) என்பவா், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்துவந்தாா்.
திருமணமாகாத இவா், உடல்நல பாதிப்பு காரணமாக வீட்டில் தனியாக வசித்து வந்தாராம். அவரது வீடு சில நாள்களாக திறக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து உறவினா்கள் வியாழக்கிழமை அளித்த தகவலின்பேரில், கொற்றிகோடு போலீஸாா் சென்று பாா்த்தபோது, மோகன்தாஸ் இறந்துகிடந்ததும், சடலம் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.