குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!
குரூப் 4 தோ்வு: குமரி மாவட்டத்தில் 28,651 போ் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,651 போ் எழுதினா்.
இம்மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 35,251 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், நாகா்கோவிலில் 43, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 8, கல்குளம் வட்டத்தில் 16, கிள்ளியூா் வட்டத்தில் 17, தோவாளை வட்டத்தில் 6, திருவட்டாறில் 9, விளவங்கோடு வட்டத்தில் 21 என மொத்தம் 120 மையங்களில் இத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தோ்வு மையங்களில் கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்கள், தோ்வறையில் நியமிக்கப்பட்டிருந்த ஆய்வு அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இத்தோ்வை 28,651 போ் எழுதினா்; 6,600 போ் எழுதவில்லை.
நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.