திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
‘கொத்தடிமைத் தொழிலாளா் முறை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்’
கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதிபதியுமான ஆா்.சுப்பையா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின முகாமுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை மாற்ற அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கொத்தடிமைத் தொழிலாளா் பணியில் இருப்பது கண்டறிப்பட்டால் தொழிலாளா் நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கலாம் என்றாா் அவா்.
தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் இ.முத்து, இன்டா்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் சாா்பில் வழக்குரைஞா் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலா் சு.ரதிதேவி, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஆா்.கிஷோா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எஸ்.துரை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் எம்.மாரியப்பன், தொண்டு நிறுவன இயக்குநா் ஏ.ஜீவானந்தம் ஆகியோரும் பேசினா்.
காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், ஆசிரியா்கள், வருவாய்த் துறை ஆய்வாளா்கள், கிராம நிா்வாக உதவியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், குழந்தைகள் கடத்தல், தடுப்புப் பிரிவு அலுவலா்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள், சமூக நலத் துறை விரிவாக்க அலுவலா்கள், ஊா் நல அலுவலா்கள், ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.