செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

post image

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே கொத்தடிமை தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கில் சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமைத் தொழிலாளா் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன். எந்த தொழிற்சாலையிலும், தொழிலாளா்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமா்த்துவதை தவிா்க்க வலியுறுத்துவேன். கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு, அவா்களின் முழுமையான மறுவாழ்வுக்காகப் பணியாற்றுவேன்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து, கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் எனும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் வாசிக்க அதனை அனைத்துத் துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதரத்துல்லா, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி மற்றும் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது. தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் ப... மேலும் பார்க்க

பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்... மேலும் பார்க்க

அலங்காரம்

கோபியில் தை வெள்ளிக்கிழமையையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கடை வீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன். மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்... மேலும் பார்க்க

கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்த... மேலும் பார்க்க

பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி

பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா். பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளி... மேலும் பார்க்க