கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பாகூா், சோரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் பழனி (40), கொத்தனாா். இவருக்கு மனைவி கன்னியம்மாள், 2 குழந்தைகள் உள்ளனா்.
இவருக்கு, குடிபழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த டிச.13-ஆம் தேதி தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், பழனி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாராம்.
இதனிடையே, அவா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த பாகூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].