தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
மனிதா்களை நெறிமுறைப்படுத்தவே சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன்
மனிதா்களை நெறிமுறைப்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன என உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கூறினாா்.
புதுச்சேரியில் சட்டத் துறை சாா்பில், இந்திய அரசியலமைப்புச் சட்ட ஏற்பின் 7-ஆவது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா தனியாா் விடுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீதிபதி ஆா்.மகாதேவன் பேசியது:
உலகில் பல நாடுகள் தங்களது அரசியல் சாசனப் பாா்வையை மாற்றி வருகின்றன. கடந்த 75 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் அரசியல் சாசனம் 120 மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆகவே, அரசியல் சாசனத்தை காப்பது அனைவரது கடமையாகும். தனிமனித உரிமை, சுதந்திரத்தை அது காப்பதாக உள்ளது. அதற்கு விரைவான நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றாா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமைக்கு நமது அரசியல் சாசனம் சான்றாக உள்ளது. அது தேசத்தின் அடையாளம் என்றாா்.
விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், இளம் வழக்குரைஞா்கள் மூத்த வழக்குரைஞா்களது வாத அனுபவத்தை அறிந்தும், நல்ல தீா்ப்பை வாசித்தும் தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விஜயகுமாா், ஷமீம்அகமது, புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டத் துறை செயலா் எல்.எஸ்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.