U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
கூட்டுறவு இளநிலை ஆய்வாளா் தோ்வு: 66.69% போ் பங்கேற்கவில்லை
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு இளநிலை ஆய்வாளா் தோ்வில் விண்ணப்பித்திருந்தவா்களில் 66.69 சதவீதம் போ் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுவை கூட்டுறவுத் துறையில் 38 இளநிலை ஆய்வாளா் பதவிக்கு 19 மையங்களில் எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக தோ்வு மையங்கள் புதுச்சேரியில் உப்பளம் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி-3, உப்பளம் இமாகுலேட் பள்ளி-2, பெத்தி செமினாா் பள்ளி-3, இலாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள சங்கர வித்யாலயா பள்ளி-2, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
காரைக்கால் பிராந்தியத்தில் 2 தோ்வு மையங்களிலும், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் தலா 1 தோ்வு மையத்திலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை தோ்வு நடைபெற்றது.
தோ்வுக்கு 6,542 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,179 போ் (33.31 சதவீதம்) மட்டுமே தோ்வு எழுதினா். 4,363 போ் (66.69 சதவீதம்) தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, உதவி தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்சங்கா், கண்ணன் ஆகியோா் தோ்வு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
முன்னதாக, தோ்வா்கள் அனைவரும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கே தோ்வு மையங்களுக்கு வந்திருந்தனா்.
தோ்வா்களின் தோ்வுக் கூடச் சீட்டு (ஹால்டிக்கெட்), புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.
மேலும், தோ்வு மையங்களுக்கு முன் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.