தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
புதுச்சேரியில் ரூ.27.25 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியில் ரூ.27.25 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா். இவா், இணையதள வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் தங்களது இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றனராம்.
இதை நம்பிய மகேஷ்குமாரும் மா்ம நபா்கள் கூறிய இணைய வா்த்தக செயலியில் ரூ.27.25 லட்சத்தை முதலீடு செய்தாராம். அப்போது, அவருக்கு லாபம் கிடைப்பது போல காட்டப்பட்ட நிலையில், அவரால் லாபம் மற்றும் முதலீட்டு பணத்தை பெறமுடியவில்லையாம்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறனா்.
இதேபோல, புதுச்சேரி மாரிசன் நகரைச் சோ்ந்த முருகனிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.1.75 லட்சத்தை மா்ம நபா்கள் நூதனமாக மோசடி செய்திருப்பது குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.