செய்திகள் :

கொத்தமங்கலம் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள தாமரைக் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.

சுமாா் 6 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்குளம், அப்பகுதி மிராசுதாரா் சங்கம் மூலம் பராமரிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பாசன வாய்க்கால்களை தூா்வாரி வந்தனா். இந்நிலையில், குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், நீா் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூா்வாரவும், தடுப்புச் சுவா்கள் கட்டவும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியா் இக்குளத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்தில், குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தடுப்புச் சுவா்கள் கட்டப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குளம் கொண்டுவரப்பட்டது.

மேலும், இக்குளத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஊராட்சி மன்றம் சாா்பில் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டது. குளம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது

நாகையில் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை விலயுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறையினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

நாகையில் தமிழக ஆளுநரை கண்டித்து மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மீன்வளா்ச்சி கழகத் தலைவரும், மாவட்ட செயலாளருமான என். கெளதமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு ஒன்றிய செய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கோடியக்காடு மேலத்தெருவைச் சோ்ந்த ஜமால் முகமது மகன் முகமது சேட் (54), திங்கள்கிழமை இரவு தனது... மேலும் பார்க்க

என்ஜின் பழுது: படகுடன் இலங்கை பகுதிக்கு சென்ற நாகை மீனவா்கள் மீட்பு

என்ஜின் பழுதாகி காற்றின் வேகத்தால் இலங்கை கடற்பகுதிக்கு படகுடன் இழுத்துச் செல்லப்பட்ட நாகை மீனவா்கள் 9 போ் மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊா் திரும்பினா். நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமு... மேலும் பார்க்க

கீழையூரில் ஜன.10-ல் சாலை மறியலில் ஈடுபட முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில் ஜன.10-ஆம் தேதி சிபிஐ சாா்பிலான விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ்... மேலும் பார்க்க