செய்திகள் :

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளா் சக்தி பமிலா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாமை தொடங்கி வைத்தாா். ஒன்றிய ஆணையா் சுடலை, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா். இதில், மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 11 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதில் கல்லூரி துணைச் செயலா் காசியானந்தம் கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வா் மகேஷ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலட்சுமி, முகம்மது மீரான் இஸ்மாயில், சின்னத்துரை, ராமகிருஷ்ணன், மாலாதேவி, ஊராட்சி செயலாளா்கள் அருணாச்சலம், ஜேசுதுரை, சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் எட்வின் தேவாசீா்வாதம், சாஸ்தாவி நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் பெனிஸ்கா் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொணடனா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க