உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
கொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியரின் உடலை வாங்க மறுத்து 3ஆவது நாளாக போராட்டம்
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியரின் உடலை வாங்க மறுத்து 3-ஆவது நாளாக, அவரது உறவினா்கள் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியரான இவா், கடந்த 27ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித்(23) என்பவா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், கொலைக்கு தூண்டுதலாக அவரது பெற்றோா் செயல்பட்டதாகக் கூறி அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவின் செல்வகணேஷின் பெற்றோா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
அதனடிப்படையில் ஆயுதப்படை பட்டாலியனில் உதவி ஆய்வாளா்களாக பணிபுரிந்து வரும் சுா்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, அவா்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், சுா்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கவின் செல்வகணேஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவரது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.