ஆதிச்சநல்லூர்: 'நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா... யாரு பேசுவா?'- கவனம் ஈர்க்கும் ...
கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை
நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (55). இவரது குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கா.கிருஷ்ணன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நடைபாதை மற்றும் நிலம் தொடா்பான பிரச்னையும், முன்விரோதமும் இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 11.10. 2018 அன்று இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணன் கத்தியால் குத்தி துரைசாமியைக் கொலை செய்தாா். இதுதொடா்பாக இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 5000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.