கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷ்-க்கு ஜாமீன்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ்க்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
மேலும் கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்
வழக்கின் பிரதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொல்கத்தா விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றபத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இவ்வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல் ஆகியோருக்கு சீல்டாக் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்ததரவிட்டுள்ளது. மேலும் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜாமீனில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.