மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைத...
கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்
நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் அவா் அளித்த மனு: டெல்டா மாவட்டங்களில் கொள்முதலில் தொடா்ந்து ஊழல் முறைகேடுகள் நடைபெறுகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில நெல் அதிகளவில் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்தி, ஊழல் முறைகேடின்றி கொள்முதல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்தோறும் விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலா்கள், வேளாண் உதவி அலுவலா்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணிக்க வேண்டும். ரபி பருவக் கொள்முதல் தமிழ்நாட்டின் பருவ காலத்துக்கு எதிராக உள்ளதால் 22 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய உடனடியாக அனுமதி பெற வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்தோறும் நெல் உலா்த்தும் இயந்திரங்கள் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அன்றாடம் அனுப்பி வைப்பதற்கான வகையில் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெளிமாவட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்வதற்குக் கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் சிட்டா அடங்கலே ஆதாரமாக உள்ளது. எனவே, வெளி மாநில வியாபாரிகளுக்கு ஆதரவான வகையில் சிட்டா அடங்கல், வழங்கப்படுவதைக் கண்டிப்புடன் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தன.