தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடலூா் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழணை கொள்ளிடம் வடி நிலக்கோட்ட உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேட்டூா் அணை கடந்த டிச.13-ஆம் தேதி தனது முழுக் கொள்ளளவில் 117.57 அடியை எட்டியது. அணைக்கு நீா் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி சுமாா் 35,000 கன அடி தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
எனவே, காவிரியில் திறந்து விடப்பட்ட உபரி நீா் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரி நீா் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதாலும், இது படிப்படியாக நீா்வரத்துக்கு ஏற்ப சுமாா் 60,000 கன அடி வரை உயா்த்தப்பட வாய்ப்புள்ளது.
எனவே, கடலூா், மயிலாடுதுரை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.