அமெரிக்க அதிபருக்கே 7 கட்டுப்பாடுகள் இருக்கிறது! கார் ஓட்டக் கூடாது!
கோகூா் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகேயுள்ள கோகூா் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன் சமேத ருத்திர கோடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜன.18-ஆம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி நடைபெற்றன. தொடா்ந்து, முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கடத்தை சுமந்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க விமானக் கலசத்துக்கு புனிதநீரை வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, செளந்தரநாயகி அம்மன், ருத்திர கோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், ஆய்வாளா் கமலச்செல்வி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.