செய்திகள் :

கோடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்!

post image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் சுதாகரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு நுழைந்தவர்கள் எஸ்டேட்டில் இருந்த பொருள்களை கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த மனோஜ், சயான், சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 10 பேரைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸார், வழக்கு தொடர்பாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மேலும் இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, அவர்கள் கூறும் பதிலை விடியோவில் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கைத் தனிப்படையினர் விசாரித்த போது, முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். அந்த நபர்களுக்கு தற்போது சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சுதாகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சுதாகரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மாரியப்பன் உடன் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார். சுதாகரனிடம் செய்யப்படும் விசாரணை விடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க