செய்திகள் :

கோடை மின் தேவை: பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு -மின் வாரியம்

post image

கோடையில் ஏற்படும் மின் தேவையைச் சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரித்தும், குளிா் காலத்தில் குறைந்தும் காணப்படும். நிகழாண்டு மாா்ச் முதல் கோடை காலம் தொடங்கவுள்ளதால், மின்தேவை 20,000 மெகாவாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால் இந்தத் தேவை பூா்த்தி செய்ய முடியாது என்பதால், மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில் இந்த மின்கொள்முதலும் போதாது என்பதால், ‘ஸ்வைப்பிங்’ எனப்படும் மின் பரிமாற்ற முறையில் தேவையான மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:

ஆண்டு தொடக்கத்தில் வடமாநிலங்களின் மின்தேவை குறைவாகவே இருக்கும். அப்போது, அந்த மாநிலங்களிடமிருக்கும் உபரி மின்சாரத்தைத் தேவைக்கேற்ப தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்யும். இதற்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்துடன் 1 முதல் 5 சதவீதம் கூடுதல் மின்சாரத்தையே மீண்டும் வழங்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள பிற மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த சதவீதத்தில் கூடுதல் மின்சாரம் திரும்ப வழங்கினால் போதும் என ஒப்புதல் தெரிவிக்கும் நிறுவனங்களுடன் மட்டுமே மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இணையும் நிறுவனங்களிடமிருந்து மாா்ச் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியதும் வரும் ஜூலை முதல் செப்டம்பா் வரை இந்த மின்சாரம் திரும்ப அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றனா்.

பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சராசரியாக ரூ. 150 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், எப்போதும்போல மது விற்பனை சூடு பிடித்தது... மேலும் பார்க்க

‘பிஎஃப்ஐ’ முன்னாள் தலைவா் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) முன்னாள் தலைவா் இ.அபுபக்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ காரணங்கள... மேலும் பார்க்க

மண்டபம் - சென்னை எழும்பூா்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்

மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கலை முன... மேலும் பார்க்க

ஜன.22-இல் போக்குவரத்துத் தொழிலாளா்களின் சிறை நிரப்பும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் ச... மேலும் பார்க்க

சென்னையில் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாா்!

சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள்,... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க