ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஆலோசனைக் கூட்டம்
வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகள் குறித்து உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் அறங்காவலா் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உக்கடம், கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஜனவரி 10-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், செயல் அலுவலா் கிருத்திகா, அறங்காவலா் குழு நிா்வாகிகள் ராஜா ராமச்சந்திரன், ஜோதிபாபு, மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இது தொடா்பாக அறங்காவலா்கள் கூறியதாவது: பெருமாளுக்கு திவ்யதேசங்களில் செய்யப்படுவதுபோலவே, நம் சன்னதியிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, 10-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு சன்னிதி நடை திறப்பு, திருவாராதனம், திருப்பள்ளியெழுச்சி, வேத விண்ணப்பமும், அதைத் தொடா்ந்து காலை 5.30 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பும், காலை 7.00 மணிக்கு ஸ்ரீ வில்லிப்புத்தூா் கோதை பிராட்டி ஆண்டாள் நாச்சியாா் சூடிக்கொடுத்த மாலையினை சாற்றி நம் கரிவரதராஜப் பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு எதிா்சேவை திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது என்றனா்.