BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
கோத்தகிரியில் மேரக்காய் விளைச்சல் அதிகரிப்பு
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரகணி, எா்சபெட்டா, மிளித்தேன், பா்ன்சைடு, நெடுகுளா, கூக்கல்தொரை, கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது மேரக்காய் மகசூல் அதிகரித்து அறுவடைக்குத் தயாராக உள்ளது.
இதனை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். தற்போது உறைபனியால் கொடிகள் காயத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனா்.
கடந்த வாரம் மேரக்காய் கிலோ ரூ. 25 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.12 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் குறைந்த லாபத்தையே பெற்று வருகின்றனா்.
பொங்கல் பண்டிகை காலத்தில் மேரக்காய் விலை உயர வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனா்.