நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கோம்பையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் அடிப்படை, உயா் நிலை மருத்துவப் பரிசோதனைகள், உடல் ஆரோக்கியப் பரிசோதனை, காச நோய், தொழு நோய், தொடக்க நிலை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
15 துறைகளைச் சாா்ந்த மருத்துவ நிபுணா்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் ஆகியவை வழங்கும் பணிகளும் நடைபெறும். பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.