4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை முழுமையாக சீரமைக்காமல் மண் குவியலாக விடப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் மண்ணில் புதைந்து விடுகின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் அங்கு பாதுகாப்பு இருப்புத் தடுப்பு வேலியை தற்காலிகமாக வைத்தனா். ஆனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்தத் தடுப்பு மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்தப் பள்ளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.