செய்திகள் :

கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னை மாடா்ன் கண்காணிப்பு அறை எண்ணுக்கு, கைப்பேசி எண்ணில் அழைத்த நபா், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னா், அந்த கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்தபோது, பேசியவா் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த செல்வம் (50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.இதுகுறி... மேலும் பார்க்க

திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா். மதுரையில் மாா்க... மேலும் பார்க்க

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை... மேலும் பார்க்க

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.மதுரை மாவட்டம், வரி... மேலும் பார்க்க

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்க... மேலும் பார்க்க

தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து ... மேலும் பார்க்க