ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை
மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. இறைச்சி விற்பனைக் கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.