தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா்.
சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலை புகுந்ததாக அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த் பாஸ்கா் தலைமையில், வனவா் கு.பன்னீா் செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி ஆகியோா் அங்கு சென்று சுமாா் 7 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாகப் பிடித்து அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.