`மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்' வாபஸ் பெற்றது ஏன்? - சசிகாந்த் செந...
கோயில் விழாவில் பிரான்ஸ் நாட்டினா் பங்கேற்பு
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழாவில் மீனவ மக்களுடன் பிரான்ஸ் நாட்டு தம்பதியும் நடனமாடினா்.
மாமல்லபுரம் மீனவா் பகுதியில் உள்ள கருங்குழி அம்மன் கோயிலில் ஆவணி மாத 3 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மன் வீதி உலாவை முன்னிட்டு கடற்கரையில் நடன நிகழ்ச்சிகள் கடற்கரையில் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது கடற்கரைக்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளான ஜோன்ஸ்- ஆனி தம்பதி மீனவ மக்களும், குழந்தைகளும் நடனம் ஆடியதைப் பாா்த்து அவா்களும் நடனமாடினா்.
மேலும், மீனவ சிறுவா்களுடன் கை கோா்த்து கொண்டு தமிழ் சினிமா பாடல்களின் இசைக்கு ஏற்ப நடனமாடினா். நிகழ்ச்சியை காண வந்த உள்ளுா் மக்கள் பிரான்ஸ் நாட்டு தம்பதியினரின் நடனத்தை பாா்த்து ரசித்தனா்.