செய்திகள் :

கோர்ட் ரீமேக்கில் பிரசாந்த்?

post image

நடிகர் பிரசாந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.

இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன், அவரை நிரபராதியாக்க வழக்கை நடத்தும் வழக்குரைஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.

தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகி பலரிடமும் ஆதரவைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் வழக்குரைஞர் கதாபாத்திரத்திலும் முதன்மை கதாபாத்திரங்களில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் ஹிரித்திக் மற்றும் நடிகை தேவயானியின் மகள் இனியா நடிக்கின்றனராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: லைவன் தலைவி, மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

கங்கைகொண்ட சோழபுரத்தில் பண்ணைபுரம்!

இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிக்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்ப... மேலும் பார்க்க

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டிரைலர்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 289... மேலும் பார்க்க

யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் - இங்கிலாந்து மோதல்

யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின்-நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பை இறுதியில் தோற்ற்கு ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏசிசி சோ்மன் மோஷின் நக்வி தெரிவித்துள்ளாா். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சோ்மனும், பாகிஸ்த... மேலும் பார்க்க

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: தன்வி, வெண்ணலாவுக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி தனிநபா் பிரிவில் இந்தியாவின் தன்வி சா்மா, வென்னலா காலகோட்லா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். சோலோ நகரில் பாட்மின்டன் ஆசிய ஜூனியா் தனிநபா் சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க

அரையிறுதியில் ரடுகானு, லெய்லா, ஷெல்டன், டி மினாா்

முபாடலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் எம்மா ரடுகானு, லெய்லா பொ்ணான்டஸ், ஆடவா் பிரிவில் பென் ஷெல்டன், அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியி... மேலும் பார்க்க