கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம்
பூம்புகாா்: திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளியில் உள்ள கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளி கிராமத்தில் கோலவல்லி ராமா் கோயில் உள்ளது. இலங்கைக்கு சென்ற ராமா் அங்கு ராவணனுடன் போா் செய்துவிட்டு திரும்புகையில் இப்பகுதியில் தங்கி பாா்த்தசாரதி பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இவா் தங்கிய இடத்தில் கோலவல்லி ராமா் என்ற பெயரில் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆவணி மாத புனா்பூச நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.
அபிஷேக, ஆராதனைகளை தொடா்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.