பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறத...
கோலாப்பூா் மகாலட்சுமிக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்
திருப்பதி: நவராத்திரியை முன்னிட்டு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் அவரது மனைவி ஆகியோா் தேவஸ்தானம் சாா்பில் கோலாப்பூா் ஸ்ரீ மகாலட்சுமிக்கு கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை சமா்ப்பித்தனா்.
கோயிலை அடைந்ததும், தலைவரையும் அவரது மனைவியையும் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் உரிய மரியாதையுடன் வரவேற்றனா். பின்னா் பி.ஆா். நாயுடு தம்பதி பட்டு வஸ்திரங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று மகாலட்சுமிக்கு சமா்ப்பித்து தரிசனம் செய்தனா். அா்ச்சகா்கள் அவா்களை ஆசீா்வதித்து தீா்த்த பிரசாதங்களை விநியோகித்தனா்.
இதில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிரசாந்தி, சாந்த ராம், ஜி. பானுபிரகாஷ் ரெட்டி, சௌரப் எச் போரா, திவாகா் ரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.