திருமலை: அக். மாத உற்சவ பட்டியல் வெளியீடு
அக்டோபா் மாதம் திருமலையில் கொண்டாடப்படும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட உற்சங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் வருடாந்திர, மாதந்திர, வாராந்திர மற்றும் தினசரி என உற்சவங்கள் பிரித்து வகைபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் உற்சவங்களுடன், அவரின் அடியவா்களான ஆழ்வாா்கள், பாஷ்யங்காரா்களின் ஜென்ம தினம், நினைவு நாள் உள்ளிட்டவையும் உற்சவங்களாக நடத்தப்படுவது மரபு.
எனவே திருமலை நித்திய கல்யாணம் பச்சைதோரணம் என்று அழைக்கப்பட்டுகிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும் முன்பு நடக்கவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள உற்சவங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
உற்சவ பட்டியல்
* அக்டோபா் 1- ஏழுமலையானின் திருத்தோ்.
* அக்டோபா் 2- தீா்த்தவாரி மற்றும் கொடியிறக்கம்.
* அக்டோபா் 3- ஏழுமலையானின் பாக் சவாரி.
* அக்டோபா் 7 - பௌா்ணமி கருட சேவை.
* அக்டோபா் 15- திருமலை நம்பி உற்சவம் ஆரம்பம்.
* அக்டோபா் 20- ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்.
* அக்டோபா் 23- பாகினிஹஸ்த போஜனம்.
* அக்டோபா் 24- திருமலை நம்பி சாத்துமோரை.
* அக்டோபா் 25- நாக சதுா்த்தி, பெரிய சேஷ வாகனம்.
* அக்டோபா் 27- மணவாள மகாமுனிகள் சாத்துமோரை.
* அக்டோபா் 28- சேனைமுதலியாா் ஆண்டு திரு நட்சத்திரம்
* அக்டோபா் 29- ஏழுமலையானுக்கு புஷ்பயாக மகோற்சவத்திற்கு அங்குராா்ப்பணம்.
* அக்டோபா் 30- ஏழுமலையானுக்கு பூஷ்ப யாகம்.
* அக்டோபா் 31- பூதத்தாழ்வாா் ஆண்டு திரு நட்சத்திரம், யாக்ஞவல்கியா் ஜெயந்தி.