கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
கோலியுடனான மோதலால் எந்த வருத்தமும் இல்லை: கான்ஸ்டாஸ்
ஆஸி. வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியுடனான சண்டை குறித்து பேசியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெற்றது. இதில் கோலி - கான்ஸ்டாஸ் உடன் மோதலில் ஈடுபட்டார். 19 வயதான கான்ஸ்டாஸ் பிஜிடி தொடரில் 4ஆவது போட்டியில் அறிமுகமானார்.
முதல் போட்டியிலேயே பும்ரா ஓவரில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த கான்ஸ்டாஸுக்கும் இந்திய வீரர்களுக்கும் பிரச்னை இருந்துக்கொன்டே வந்தது.
இந்த நிலையில் 7நியூஸ் மெல்போர்ன் அணிக்கு அளித்த பேட்டியில் கான்ஸ்டாஸ் கூறியதாவது:
எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அந்தப் போட்டியினால்தான் நான் வாழ்ந்திருந்தேன். மிகவும் சிறப்பான போட்டி அது. பொய் சொல்லவில்லை, அந்தப் போட்டியை நான் பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்தேன் என்றார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. அணி பிஜிடி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கடைசி டெஸ்ட்டுக்கு முன்னதாக கான்ஸ்டாஸ் குடும்பத்தினர் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இலங்கை உடன் ஆஸி. அணி 2 டெஸ்ட்டில் மோதுகிறது. இந்தப் போட்டிகள் ஜன.29ஆம் தேதி தொடங்குகிறது.