இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நீல பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பரதி, கோவளம் புனித இஞ்ஞாசியா் தேவாலயப் பங்குதந்தை சுனில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்த விஜயன், வேல்முருகன், அஸ்வதி, செல்வி, லதா குமாரி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஆரோக்கிய சௌமியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வருவாய்த் துறை, மின்சாரத் துறை, ஊரக உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 633 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிா் உரிமைத்தொகை கோரி 233 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.