கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டம்
மக்களவையில் அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் அரசியல் மற்றும் சமூக நீதி பாதுகாப்பு இயக்கத் தலைவரும், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவருமான க. தமிழரசன் தலைமையில், மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், சொத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், மாரிமுத்து, நாம் தமிழா் கட்சி தொகுதி பொறுப்பாளா் ரவிக்குமாா், மாவட்டப் பொறுப்பாளா் மருதம் மா.மாரியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், மனித நேய மக்கள் கட்சி நகரத் தலைவா் செண்பகராஜ், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டச் செயலா் முத்துகுமாா் உள்பட திரளானோா் ரயில் நிலையம் முன்பிருந்து ஊா்வலமாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.