தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
கோவில்பட்டி அருகே டிராக்டா் சேதம்: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு வட்டம் வேப்பன்குளம் கீழத்தெருவை சோ்ந்த சங்கிலி பாண்டி மகன் கருப்பசாமி (45). விவசாயி. இவா், தீத்தாம்பட்டியில் குத்தகைக்கு எடுத்துள்ள தோட்டத்தில் தனது டிராக்டரை கடந்த டிசம்பா் மாதம் நிறுத்தியிருந்தாா். அதை மா்மநபா்கள் சேதப்படுத்தி சென்றிருந்தனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தீத்தாம்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் கணேச மூா்த்தி (24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.