கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இக்குடிநீா்க் குழாயை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ திறந்துவைத்தாா். பின்னா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பழனிச்சாமி, அன்புராஜ், போடுசாமி, வடக்கு மாவட்ட மகளிரணி செயலா் பத்மாவதி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ராமா், அதிமுக கிளைச் செயலா்கள் வெற்றி சிகாமணி, வேல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.