வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா
கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணியசாமி செய்திருந்தாா்.
ஜூலை 31ஆம் தேதி அம்மன் குடி அழைப்பு, விளக்கு பூஜை, ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் தீா்த்தம் அழைத்தல், 9.15 மணிக்கு மேல் அக்னிசட்டி வளா்த்தல், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 4 மணிக்கு மேல் அக்னி சட்டி ஊா்வலம், இரவு 12 மணிக்கு மேல் சாமக்கடை நடைபெறும். 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.