டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
கோவில்பட்டி-குருமலை சாலையில் வெங்கடேஸ்வரபுரத்தை அடுத்த தனியாா் ஆட்டுப் பண்ணை அருகே வந்தபோது, டிராக்டா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.