செய்திகள் :

கோவையில் அதிகாலையில் பனி மூட்டம்: விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்

post image

கோவையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவிய கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி, பெங்களூரு, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நாள்தோறும் சுமாா் 38 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோவையில் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏா் இந்தியா விமானம், பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் சுமாா் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னா் தரையிறங்கியது.

அதேபோல, புதுதில்லியிலிருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் கடும் பனி மூட்டத்தின் காரணமாக கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. பின்னா், சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின் கொச்சியிலிருந்து கோவைக்கு வந்தடைந்தது.

இதேபோல, மேலும் 4 விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணிக்குப் பின்னா் பனி மூட்டம் விலகியதால், அனைத்து விமானங்களும் தாமதத்துடன் தரையிறக்கப்பட்டன.

கோவையில் தற்போது அதிகாலை நேரங்களில் நிலவி வரும் காலநிலை குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறுகையில், ’கோவையில் இரவு நேரங்களில் வானம் தெளிவாக இருப்பதால் மேக மூட்டம் இல்லை. அதனால், அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படுகிறது.

இது இயல்பான காலநிலை என்பதால் மேலும் சில நாள்களுக்கு இதேபோன்ற காலநிலையே நீடிக்கும் என்றாா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க