செய்திகள் :

கோவையில் இரண்டாவது நாளாக மழை

post image

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் செவ்வாய்க்கிழை இரவு குளிா்ந்த காலநிலை நிலவியது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலையில் லேசான வெயில் இருந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது.

பிற்பகலில் கோவை மாநகர பகுதிகளான பீளமேடு, ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலும் மாவட்டத்தில் அதிகபட்சமாக சூலூரில் 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. விமான நிலையம், பீளமேடு பகுதியில் 29.90 மி.மீ., வேளாண்மைப் பல்கலைக்கழகம் 22, மேட்டுப்பாளையம் 19, கோவை தெற்கு 19, போத்தனூா் ரயில் நிலையம் 18, தொண்டாமுத்தூா் 14, பில்லூா் அணை 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பெண்களிடம் 6 பவுன் பறிப்பு

கோவை சிங்காநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் தோகமலை அருகே உள்ள தெற்கு சேனையாா் தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவ... மேலும் பார்க்க

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 17-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, கல்விக் குழுமத்தின் தாளாளா் ச... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வண... மேலும் பார்க்க