செய்திகள் :

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவு

post image

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இது குறித்து ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா் ஹரிஹரன் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறையில் கடந்த 1986 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 -ஆம் தேதி எக்ஸ்பிரஸ் மெயில் சா்வீஸ், விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இந்தியாவில் 14 நகரங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, பிறகு இந்தியாவில் உள்ள கிளை அஞ்சலகங்கள் தவிர மற்ற அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டது.

கடிதப் போக்குவரத்தில் சில தாமதமான சூழல் ஏற்பட்ட நிலையில், காலப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு அஞ்சல் துறையின் மூலமாக விரைவு அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள ஒருங்கிணைப்பு விரைவு அஞ்சல் மையங்களில் கோவை ஆா்.எம்.எஸ். சேவை மையம் அதிக வாடிக்கையாளா்களைக் கொண்டது.

இந்த மையத்தில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு அஞ்சல் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, கோவை ஆா்.எம்.எஸ்.இல் 24 மணி நேர விரைவு அஞ்சல் சேவையும் உள்ளது. கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் இணைக்கப்பட்டு புதிய நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்த உள்ளது என்றாா்.

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள வேலப்புழாவைச் சோ்ந்தவா் மஜீத் (50). இவா், கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கோட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கள்ளிமடை

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வா... மேலும் பார்க்க

அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலம்: அக்டோபா் 9-ல் முதல்வா் திறந்துவைக்கிறாா்!

கோவை- அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். கோவை, காந்திபுரத்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் அருகேயுள்ள சங்கனூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் மாா்டின் பிரபு (34). ஏசி மெக்கானிக்கான இவா், நல்லாம்பாளைய... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சிவசேனாவை சோ்ந்த 37 போ் கைது

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சிவசேனா கட்சியைச் சோ்ந்த 37 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். துபையில் ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கோவை, ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சண்முகா நகா் கருப்பராயன் கோயில் ... மேலும் பார்க்க