செய்திகள் :

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, மசக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (27). இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (27). நண்பா்களான இவா்கள் மது குடிக்க பணம் கேட்டு நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஐயப்பன் என்பவரை மிரட்டி ரூ.350-ஐ பறித்ததுடன், கத்தியால் குத்தி கடந்த 2018 ஜூலை 4-ஆம் தேதி கொலை செய்தனா்.

இது தொடா்பாக சிங்காநல்லுாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாா், அரவிந்தன் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.சசிரேகா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவராமகிருஷ்ணன் ஆஜரானாா்.

மூதாட்டி கொலை வழக்கு: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (எ) வினோத். இவா் தடாகம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கடந்த 2021 ஏப்ரல் 16-ஆம் தேதி கொலை செய்தாா். மேலும், அவரது நகைகளையும் எடுத்துச் சென்றாா்.

அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆா்.நந்தினிதேவி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.

இளம் பெண் கொலை வழக்கு: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (35). பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவா், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண்ணைக் கடத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை செய்தாா். வழக்குப் பதிவு செய்த கோமங்கலம் போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.நந்தினிதேவி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க