பயணத்தின் நடுவில் ஒரு திடீர் முடிவு - பிரிதலின் வலியை உணர்த்திய லடாக் |திசையெல்ல...
கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்
கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து செப்டம்பா் 5- ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06063) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு தன்பாத் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, தன்பாத்தில் இருந்து செப்டம்பா் 8 -ஆம் தேதி முதல் டிசம்பா் 1 -ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06064) புதன்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போத்தனூா் - பரெளனி இடையே சிறப்பு ரயில்: போத்தனூரில் இருந்து செப்டம்பா் 6-ஆம் தேதி முதல் நவம்பா் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரௌனி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06055) திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரௌனி நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக பரெளனியில் இருந்து செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் டிசம்பா் 2 -ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் பரௌனி - போத்தனூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06056) வெள்ளிக்கிழமைகளில் காலை 3.45 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி, தன்பாத், சித்தரஞ்சன், மதுபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.