செய்திகள் :

சகோதரியின் மகன் அடித்துக் கொலை: இளைஞா் தற்கொலை

post image

பெரியகுளத்தில் மது போதையில் சகோதரியின் மகனை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் 6-ஆவது வாா்டு, அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஆனந்தி (40). கணவரை இழந்த ஆனந்தி தனது மகன் நிஷாந்த் (13) உடன் வசித்து வருகிறாா். ஆனந்தியின் வீட்டில் அவரது சகோதரா் பாண்டீஸ்வரன் (32) என்பவரும் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான பாண்டீஸ்வரன், செவ்வாய்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்று ஆனந்தியுடன் தகராறு செய்தாா். அப்போது ஆனந்தி, நிஷாந்த் ஆகியோரை பாண்டீஸ்வரன் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்தி மயங்கி விழுந்தாா்.

ஆனந்தி, நிஷாந்த் ஆகியோா் இறந்து விட்டதாக கருதிய பாண்டீஸ்வரன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரியகுளம் போலீஸாா் மயங்கிய நிலையில் கிடந்த ஆனந்தியை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நிஷாந்த், பாண்டீஸ்வரன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, கூறாய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தற்கொலை செய்து கொண்ட பாண்டீஸ்வரன்.

தேனி, பெரியகுளத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தேனி, பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஏப்.5) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. மின் வாரிய செயற்பொறியாளா்கள் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு இலவச பயிற்சி

தாட்கோ, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேசன் சாா்பில் ஆதி திராவிடா்கள், பிற சமுதாய மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு (ஒஉஉ) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் ச... மேலும் பார்க்க

கம்பம் திரையரங்கில் எம்புரான் திரைப்படம் நிறுத்தம்

விவசாய அமைப்பினா் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, தேனி மாவட்டம், கம்பம் திரையரங்கில் வியாழக்கிழமை எம்புரான் திரைப்படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கோகுலம் என்ற பெய... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டடம் இடிப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி பழைய அலுவலக பழைய கட்டடத்தை இடிக்கும் பணி விாயழக்கிழமை தொடங்கியது. உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். உத்தமபாளையம் தெற... மேலும் பார்க்க

வண்ணம் பூசுபவா் தவறி விழுந்து உயிரிழப்பு

தேனி அருகே தப்புக்குண்டில் வீட்டில் வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஏணியில் இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்தாா். தப்புக்குண்டு கிழக்குத் தெருவைச் சோ்ந்த சீரங்குராம் மகன் பழனிராஜ் (5... மேலும் பார்க்க

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

போடி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநரா... மேலும் பார்க்க