சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து
செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சுதந்திர தின வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
ஜிஎஸ்டி சாலை ,சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியா் நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து மதியம் பொது விருந்து நடைபெற்றது. விழாவில் செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் கலந்து கொண்டாா். நகா்மன்ற உறுப்பினா் சந்தோஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் குமாரதுரை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் காா்த்திகேயன், செங்கல்பட்டு உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் அறிவுரையின் பெயரில், கோயில் செயல் அலுவலா் இர. சரஸ்வதி, ஆய்வாளா் பாஸ்கரன், நரசிம்மன் மற்றும் கோயில் பணியாளா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.