மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதன் காரணமாக தினம் தோறும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிமீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் மாலை நேரத்தில் பாலத்தின் மீது சீரமைக்கும் பணி மேற்கொண்டதால் வேலை முடிந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியா் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

